Wednesday, 16 October 2013

ஆனால்

 ஆனால்- சிறுகதை.


-சரண்குமார்.
 
இதோ மீண்டும் வேலைக்கு கிளம்பிட்டேன். என்ன வேலைனா கேக்கீறீங்க கொலை பன்ன தான். நான் கூலிக்கு கொலை பன்னுறது என் மனைவிக்கு கூட தெரியாது. டிராவள்ஸ் வேறு சும்மா வெளி உலகத்துக்காக வைச்சிருப்பதால அவளுக்கு என் மேல் சந்தேகமும் வந்ததில்லை. நான் இந்த ஊர்ல ரொம்ப பிரொவஷனல்லான கொலைகாரன். என்னை தேடி ரொம்ப சிலர் தான் வருவாங்க. அதில் பாதி பேர் நான் கொலை செஞ்சா போதும் தண்டனையை நான் வாங்கிக்கிறேன் சொல்லிடுவாங்க, அந்த அளவுக்கு அவங்களுக்கு பழி வாங்கனும்னு வெறி மீதி பேர் கொலை செஞ்சா போதும்னு சொல்லுவாங்க.
இந்த மாறி கூலிக்கு கொலை பன்னிட்டு என்னால ஜெயில்லிக்குலாம் போக முடியாது, அதனால அவங்க கிட்ட நான் தெளிவா கேட்டிருவேன் இந்தக் கொலைப் பழிய உங்களை தவிர வேறு யாரு மேல விழுந்தா ரொம்ப நம்புவாங்கனு. அப்படி அவுங்க சொல்ற ஆளை நான் தெளிவா ப்ளான் போட்டு மாட்டி விட்டுறுவேன். எப்படிலாம் கேக்காதீங்க மாட்டிவிடுறதுலாம் நம்ம ஊர் காரங்ககிட்ட ரொம்ப ஈசி.
எனக்கு இந்த கொலை பன்னுற தொழில்ல பிடிக்காத்துனா அது அந்த கடைசி நேரத்தில நாம கொலை பண்ணப் போற ஆள் போடுற சத்தம் தான். எனக்கு நான் கொலை செய்த ஆளுங்களோட முகம்லாம் ஞாபகம் இல்லை, எல்லாம் ஒரு கானல் நீரில  தெரியிற காட்சி மாறி தான் அவுனுக முகம்லாம் இருக்கு. ஆனா அவுனுகளோட கடைசி சத்தம்.
எதுவுமே என் மனசைவிட்டு அகலலை. எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கு. இந்த மூளைக்கு சத்தங்களை தெளிவா ரொம்ப நாள் பாதுகாக்கிற சக்தி இருக்கு போல. எப்ப தூங்குனாலும் சரி, முகமே தெரியாத ஒரு உருவம் வந்து, ” நான் உனக்கு எவ்வுளவு வேணும்னாலும் காசு தரேண்னு” , இல்லை “டேய் விட்டிடுடா தே……” அப்படினு வந்து தெள்ளத் தெளிவா கத்தும்
 சரி இனிமே நாம் கடைசியா அவனுக விடுற சத்தம் காதுக்குள்ள விழுக கூடாதுனு ஒரு சைலன்சர் போட்ட துப்பாக்கி ஒன்னை வாங்கிட்டு ஒரு அசைன்மெண்ட்டுக்காக் பிளானோட கிளம்பினேன். பிளான் என்னன்னா, நான் கொல்லப் போற ஆள் பாடி பிர்டஜ் கிட்ட இருக்கிற அம்மன் கோவிலுக்கு நைட்  11 மணிக்கு கார்ல வருவான், அவன் எதுக்கு வர்றான்னு எனக்கு தெரியாது ஆனா அதே நேரத்தில நான் மாட்டு விடப் போற ஆளும் அதே பாடில அவன் ரூம்லயும் தூங்கி கிட்டிருப்பான் அவன் வீட்ல நான் வச்ச இன்னொரு துப்பாக்கியவும் தூங்கிகிட்டிருக்கும். இப்போ நான் வர போற ஆளை கொலை செய்யனும் அது தான் பாக்கி.
  நைட் 11 மணி கரக்டா அவன் அம்மன் கோவில் கிட்ட காரை நிறுத்துறான் என்னோட துப்பாக்கில இருந்து வந்த குண்டு அவன் மண்டையில விழுகுது. சக்ஸஸ். கச்சிதமா கொன்னாச்சு.  நான் சுட்ட இடத்துல அவன் என்ன கத்துனாலும் கேக்காது. நான் பன்னுனதுலயே பெர்வெக்டான கொலை இதுவா தான் இருந்திருக்கனும்.
ஆனா சின்ன தப்பு நடந்திருச்சு, அந்த லூசு குண்டை வாங்கி அந்த சைட் தான் விழுந்திருக்கணும் ஆனா அவன் நேரா மண்டைய ஹார்ன்ல வச்சிட்டான், பிளரிக்கிட்டு ஒரு சத்தம். எப்பா என்னால தாங்க முடியலை மனிதர்கள் போடுற சத்தம் எவ்வுளவோ பரவாயில்லை. இது எதோ 10 பொம்பளைங்க அழுகுற மாறி ஒரு சத்தம் அதுவும் கழுதை குறள்ல. அன்னைக்கு அந்த சத்தத்தாலயே என்னால தப்பிக்கிறதும் கஸ்டாமாயிடுச்சு. குறட்டூர்ல என் ஃப்ர்ண்டு வீடு இருக்கிறதால அன்னைக்கு நான் தப்பிச்சேன்னு கூட சொல்லலாம்.
சரி பழைய கதைலாம் இப்ப எதுக்கு. எனக்கு இப்ப இருக்கிறதெல்லாம் ஒரே நினைப்பு தான் சத்தம் இல்லாம கொலை செய்யனும் அதுக்கு தான் கிளம்பி ஆவடிக்கு போய்கிட்டிருக்கேன். அவடி பஸ் ஸ்டாண்ட் பின்னாடி இருக்கிற கிரவண்டுல தான் இன்னைக்கு அசைன்மெண்ட்.இந்த வாட்டி சத்தம் இல்லாம கொலை பன்ன என்னோட பிளான்,  தொண்டையிலயும், நெஞ்சிலயும் முதல்ல குத்துனா அவன் எந்த சத்தமும் போட மாட்டான் மொக்கயா தான் இருக்கு இருந்தாலு ஒரு டிரை தானே. நான் வழக்கமா செய்யிற எல்லா முன் ஏற்பாடுகளையும் செஞ்சாச்சு. என் மனைவிட்ட திருப்பதிக்கு போறேன்னு சொல்லிட்டேன். இந்த வாட்டி வேற வண்டிய எடுத்துக்கிட்டு அம்பத்தூர்ல நிப்பாட்டிட்டு. லோக்கல் டிரைன்ல ஆவடி வந்திட்டேன்.
இரவு 9.45,இப்போ நான் வர வேண்டிய கிரவுண்டுக்கு வந்தாச்சு, அந்த கிரவுண்டல ரண்னிங் பிராக்டிஸ் எடுத்திக்கிட்டுறுக்கிற பையனைதான் நான் கொல்லனும். இந்த கிரவுண்ட் பக்கத்தில் ஒரு ஜெயின் மத கோவில் மட்டும் தான் இருக்கு. பின்னாடி ஆவடி பஸ் ஸடாண்ட் இருக்கு.ரொம்ப ஆள் நடமாட்டமும் இல்லை. நான் மெதுவா நடந்து அவன் கிட்ட போய் கிட்டிருக்கேன்.
பின்னாடியிருந்து ஒரு குரல், ’டேய் பா…”
“………”, எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. காந்தி படம் போட்ட டீசர்ட் போட்டுகிட்டு ஒருத்தன் நின்னான். இவனை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை.
”பெரிய பிளான் புடுங்கினு நினைப்பா, உன்னைய எப்படி பிடிக்கிறதுனு எனக்கு தெரியும்டா பா…, என தம்பியக் கொன்ணுட்டு நான் செட்டப் பன்னுன ஆள் சொன்னான்னு என் இன்னொரு தம்பியவும் கொலை செய்ய வந்துட்டியா டா”
எனக்கு அப்ப தான் என்னோட தப்பு புரிய ஆரம்பிச்சது, நான் என்னோட தொழில் வளர ஆரம்பிச்சோன எனக்கு வேலை கொடுக்கிறது யாருனு நல்லா விசாரிக்கனும்னு நினைச்சேன் ஆனா சத்தம் இல்லாம ஒரு கொலையாவது செய்யனும்கிற ஆர்வத்தில் நான் அந்த விசயத்தலாம் மறந்துட்டேன்.
“என்னடா முழுக்கிற”, அப்படி சொல்லிக்கிட்டே காந்தி டீ ஸர்ட் ஒரு பெரிய கத்தியை உருவுனான், நான் பின்னாடி திரும்பி ஓடலாம் அப்படினு நினைச்சி திரும்பினப்போ என்ன சுத்து நாலு பேர் அப்படியே பிடிச்சிக்கிட்டாங்க. நான் சத்தம் போட வாய திறக்கப் போனேன் அப்போ என்னைய பின்னாடில இருந்து பிடிச்சிக்கிட்டிருந்தவன் வாயத் திறந்தான்.
“ டேய் நீ இங்க வாயத் திறந்தீனா, உன் சம்சாரம் அங்க வாய மூடிடும், உன் வீட்டுக்கு முன்னாடியும் ஆள் நிக்குது. இங்க நீ சைலண்டா செத்தீனா அங்க அவுங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. நீ சத்தம் போட்டே அவுங்க அங்க காலி”
“புரியுதாடா” இப்போ அந்த காந்தி டீ ஸ்ர்ட் என் முன்னாடி கத்தியை வச்சிக்கிட்டு கேட்டான்.
அது வரை திமிரிக்கிட்டுருந்த நான் அதோடு என் பேச்சு அடங்கிரிச்சு. கிட்ட தட்ட நான் அமைதியான நிலைக்கு போனேன். என் முன்னால் நின்றுக் கொண்டிருந்தவர்கள் சத்தமும் அடங்கி, அவர்கள் மறைஞ்சு நான் கொலை செஞ்ச ஆட்களின் சத்தம் விடாது கேட்டுச்சு.
என் நினைவுக்கு நான் மீண்டும் திரும்பும் பொழுது என் முன் கத்தி என் தொண்டையை நோக்கி வருகிறது நான் ஒரு சத்தமும் போடலை. நான் இது வரை ஆசைப்பட்ட சத்தமில்லாத கொலை நடக்க போகுது ஆனால் சாகப்போவது நான்.

No comments:

Post a Comment